Happy Fathers Day - A tamil poem....
My dear social friends, brothers and sisters ...
Vanakkam, Namaste.
I
trust
everyone is doing well.. Happy Fathers day to everyone...
Thinking about myself as daddy.. Writing a poem, after a long time with some energy....This is about fathers day...
Writing this in my mother-tongue - TAMIL....
ஆகாய பயணம், அது ஒரு அழகான பயணம்,
ஆகாய பயணம், ஆம், அது ஒரு அமைதியான பயணம்,
ஆகாய பயணம், ஆம், அது ஒரு அனுபவ பயணம்,
ஏர்பஸ் 380, அது ஒரு அழகான விமானம்,
வளைகுடாவில் ஏறினேன், வங்காள விரிகுடா செல்ல,
அமைதியை எதிர்பார்த்தேன், ஆனால் ஆண்டவன் அனுபவிக்க சொன்னான் ..
தந்தை என்ற மந்திரத்தை ...
இதோ.. இங்கே
நடக்க சென்றேன் விமானத்துக்குள் .. நண்பனை கண்டேன் ...
தந்தையின் அறுபதாம் கல்யாணம் என்றான், அதனால் செல்கிறான் என்றான்..
தந்தை தாயை பற்றி சொன்னான்.. மகிழ்ச்சி ..
தந்தை பற்றி சொன்னான்..தந்தையின் அமெரிக்கா பயணம் பற்றி சொன்னான் .... மகிழ்ச்சி
நடக்க சென்றேன் விமானத்துக்குள் .. நண்பனை கண்டேன் ...
தந்தை தவறினார் என்றான், அதனால் செல்கிறான் என்றான்..
தந்தை பற்றி சொன்னான்.. கண்ணீர் விட்டான்...
தந்தை பற்றி சொன்னான்..தந்தையின் வாழ்க்கை பயணம் பற்றி சொன்னான் .... அனுபவம் ...
இருக்கையில் அமர்ந்தேன் .. ஒரு நபரை நோக்கினேன் ...
அவரின் குழந்தை அழுகிறது... அனைவரையும் பார்க்க வைக்கிறது...
எழுந்தார்... எடுத்தார் குழந்தையை .. நடந்தார்..
நடந்து கொண்டே இருந்தார்... ஆம் தந்தை அவர்..
மந்திரத்தை சொன்னார்... தந்தை என்ற மந்திரத்தை சொன்னார் ..
ஆம், குழந்தை உறங்க, தந்தை என்ற தொட்டிலாக மாறினார் ...
குலுங்கியது விமானம், குழந்தை கதறுகிறது,
கோமாளியாக மாறுகிறான் குழந்தைக்காக ... குழந்தையை உறங்க வைக்க.. சிரிக்க வைக்க ...
காவலனாக மாறுகிறான் மனைவியின் மனதில் ...
இதோ.. இங்கே... ஆம். daddy.. டாடி.. தந்தை, தகப்பன் ...
ஆகாய பயணம், அது ஒரு அழகான பயணம், அனுபவ பயணம்
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை,
தந்தையை மிஞ்ச எந்திரம் இல்லை, AI இல்லை,
தன்னை தந்தை என்று அழைக்கும் போது தான், தந்தையின் ஆழம் தெரியும்,
தன்னை தந்தை என்று அழைக்கும் போது தான், தந்தையின் விரதம் தெரியும், பரதம் புரியும் ...
தந்தை என்ற சொல்லின் மந்திரம் புரியும், ஆனால் chatGPT க்கு புரியாது ...
தந்தையை மிஞ்ச NVIDIA இல்லை, ஆப்பிள் இல்லை, Gemini இல்லை.
வளைகுடாவில் ஏறினேன், வங்காள விரிகுடா வந்து சேர்ந்தேன் ,
அமைதியை எதிர்பார்த்தேன், ஆனால் ஆண்டவன் அனுபவிக்க சொன்னான் ..
தந்தை என்ற மந்திரத்தை ...
ஆகாய பயணம், அது ஒரு அழகான பயணம்,
ஏர்பஸ் 380, ஆகாய பயணம், ஆம், அது ஒரு அமைதியான பயணம்,
ஆகாய பயணம், ஆம், அது ஒரு அனுபவ பயணம், தந்தை என்ற மந்திரத்தை அனுபவிக்க ..
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் ....
வாழ்க வளமுடன் ....
Comments
Post a Comment